பூந்தமல்லி திமுக நகர செயலாளர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்- துரைமுருகன் நடவடிக்கை

பூந்தமல்லி திமுக நகர செயலாளர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்- துரைமுருகன் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 March 2022 7:27 PM IST (Updated: 4 March 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி நகராட்சி தலைவர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியை நிறுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை 'ராஜினாமா' செய்ய வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திமுக நகர செயலாளர் ரவிக்குமார் கட்சியில் இருந்து கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்திய ரவிக்குமார் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

பூந்தமல்லி நகராட்சி தலைவர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியை நிறுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story