அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டிலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது..!


அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டிலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது..!
x
தினத்தந்தி 4 March 2022 9:32 PM IST (Updated: 4 March 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அகரம் கிராமத்தில் ஊராட்சி அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெய கோபி (46) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியர் ஜெய கோபி தன்னிடம் பயின்றுவரும் மாணவிகளிடம் சாக்லெட் மற்றும் செல்போன் கொடுத்து அந்த மாணவிகளிடம் விளையாடுவது போல் நடித்து பாலியல் சீண்டல் தொடர்ந்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சில மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியதையடுத்து இன்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் சூழ்ந்து ஆசிரியரை கண்டித்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திருத்தணி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கார்த்திகா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அவர் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் ஜெய கோபியை போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகளிடம் இதுபோன்ற பாலியல் செயலில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் ஜெய கோபியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story