261 பேருக்கு கொரோனா; தஞ்சையில் மட்டும் ஒருவர் உயிரிழப்பு


261 பேருக்கு கொரோனா; தஞ்சையில் மட்டும் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 March 2022 3:31 AM IST (Updated: 5 March 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 51 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 156 ஆண்கள், 105 பெண்கள் என மொத்தம் 261 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேரும், கோவையில் 37 பேரும், செங்கல்பட்டில் 31 பேரும், திருவள்ளூரில் 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தமிழகத்தில் இதுவரை, 34 லட்சத்து 50 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 860 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 37 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 11 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 705 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 3 ஆயிரத்து 505 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story