பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மின்வாரிய அதிகாரி கைது...!


பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மின்வாரிய அதிகாரி கைது...!
x

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மின்வாரிய அதிகாரியை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.


சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவரது தாய் சிறுமியை ராயபுரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.  இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார்.

அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது  மின்சார வாரியத்தில் உதவி தணிக்கை அலுவலராக பணியாற்றி வரும் ராஜசேகரன் (வயது 48) என்பது தெரியவந்து. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜசேகரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story