சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் வரை இந்த கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
தமிழக பட்ஜெட் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் அது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் தொழில் வளர்ச்சி திட்டங்கள், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த விரிவான செய்தி அறிக்கை, தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story