சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கால் பாதத்தில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது..!


சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கால் பாதத்தில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது..!
x
தினத்தந்தி 5 March 2022 8:08 PM IST (Updated: 5 March 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கால் பாதத்தில் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து இன்று பயணிகள் விமானம் ந்தது. பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் வெளியில் நடந்து சென்ற போது நடை சற்று வித்தியாசமாக இருந்தது. கால்களில் அணிந்திருந்த செருப்புகளை இழுத்து இழுத்து நடந்து சென்றார். 

இதனால் சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சோதனை செய்தனர். அவரின் செருப்புகளை கழற்றிய போது கால் அடி பாதத்தில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரித்து பாா்த்த போது தங்கப்பசை அடங்கிய சிறிய பாா்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இரு கால்களின் அடியில் இருந்து 240 கிராம் தங்கப்பசை எடுத்தனர். ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story