6 மணி 40 நிமிடங்களில் சென்னை வருகை; வைகை எக்ஸ்பிரஸ் சாதனை


6 மணி 40 நிமிடங்களில் சென்னை வருகை; வைகை எக்ஸ்பிரஸ் சாதனை
x
தினத்தந்தி 5 March 2022 8:40 PM IST (Updated: 5 March 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டு, 6 மணி 40 நிமிடங்களில் மதுரையிலிருந்து சென்னை வந்தடைந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சாதனை படைத்து உள்ளது.



சென்னை,



மதுரையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் வைகை எக்ஸ்பிரஸ் (சூப்பர்பாஸ்ட்) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.  இதில், ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் பயணிக்கின்றனர்.  

இந்நிலையில், மதுரையிலிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக 27 நிமிடங்கள் முன்பாகவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்து உள்ளது.  வழக்கமாக மதுரை-சென்னை இடையேயான 493 கிலோ மீட்டர் தொலைவை, 7 மணி 25 நிமிடங்களில் கடந்து வந்த நிலையில், 6 மணி 40 நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டும், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டும், சிக்னல்களில் நின்று அனுமதி கிடைத்த பின்பே இயக்கப்படும் சூழலில் குறைந்த மணிநேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை வந்தடைந்து சாதனை படைத்து உள்ளது.


Next Story