போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம்; ரேஷன் கடை பணியாளர்களுக்கு எச்சரிக்கை


போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம்; ரேஷன் கடை பணியாளர்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 March 2022 9:04 PM IST (Updated: 5 March 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.





சென்னை,


தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  இதனை மீண்டும் வழங்க வேண்டும், கடைகளில் பழுதடைந்துள்ள விற்பனை முனைய எந்திரங்களை உடனுக்குடன் வட்ட பொறியாளர்களே சரிசெய்து தர வேண்டும், பழுதடைந்த நிலையில் இருக்கும் ரேஷன் கடை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஊதியம், மாதத்தின் முதல் நாளே வழங்க ஆவன செய்யப்பட வேண்டும் என்பன போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது..  போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து நாட்களுக்கும் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


Next Story