கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 2 வாலிபர்கள் கைது


கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 2 வாலிபர்கள்  கைது
x
தினத்தந்தி 5 March 2022 10:06 PM IST (Updated: 5 March 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை
திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது அரசு கலைக்கல்லூரி அருகில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

2 பேர் கைது

இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, திருபுவனை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூங்காவனம் மகன் யுவராஜ் (21), திருபுவனை தோப்பு தெருவை சேர்ந்த தனபால் மகன் தமிழ்வாணன் (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.  இவர்களுக்கு       கஞ்சா விற்பனை  செய்த திருபுவனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சையை (20) போலீசார்     தேடி   வருகின் றனர்.

Next Story