அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுமா? அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி புகழேந்தி பதில்
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அ.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.
அதில், தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ‘தொடர் தோல்விகளால் அ.தி.மு.க. துவண்டு போய் இருப்பதாகவும், அக்கட்சி தற்போது அவசர சிகிச்சை பிரிவில் போராடிக் கொண்டு இருப்பதாகவும், தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஓ.பன்னீர் செல்வத்துக்குக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை’ என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசும் போது, சசிகலாவால் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்பது புரியவில்லை என்றும் அவர், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா ஆதரவு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான் கூறுகையில், எங்கள் தீர்மானத்திற்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அ.தி.மு.க. வலுவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொண்டர்கள் பலர் இணைப்பு மனநிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுமா? உள்பட அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு இருவரும் பதில் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story