122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 March 2022 7:12 AM IST (Updated: 6 March 2022 7:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 122-வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை.  இதனால், சென்னையில் கடந்த பல நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது. 

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் சூழலில், முதல் நாள் போரால் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது.  எனினும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரவில்லை.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 122 வது நாளாக இன்றும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.


Next Story