உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு


உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 6 March 2022 7:36 AM IST (Updated: 6 March 2022 7:36 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பும் மாணவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு அவர்களை அழைத்து செல்ல நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வாழ் தமிழர் நிதியைபயன்படுத்தி மாணவர்களை மீட்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு குழுக்களுக்கான செலவு என ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்தும் டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வருவதற்காக ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

போர் முனை பகுதியில் இருந்து அண்டை நாட்டின் எல்லைப்பகுதிக்கு 35 மாணவர்களை அழைத்து வருவதற்கான பஸ் கட்டணம் ரூ.14 லட்சத்தை அரசு செலுத்தி உள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் டெல்லியில் இருந்து தமிழக அரசின் சிறப்பு குழு முயற்சியால் 181 மாணவர்கள் தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story