தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர்,மயிலாடுதுறை,தஞ்சை,நாகை,திருவாரூர்,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும்,சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு,விழுப்புரம்,மயிலாடுதுறை,கடலூர்,நாகை,புதுக்கோட்டை,தஞ்சை,திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும்,இதனால்,தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் 500 மீ தூரத்திற்கு உட்புகுந்தது. கடல் சீற்றம் காரணமாக 4 ஆண்டுகளில் 40 வீடுகளும், 150 தென்னை மரங்களும் அலையில் இழுத்து செல்லப்பட்டன.
Related Tags :
Next Story