வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து...!


வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து...!
x
தினத்தந்தி 6 March 2022 1:27 PM IST (Updated: 6 March 2022 1:27 PM IST)
t-max-icont-min-icon

வைக்கோல் ஏற்றி வந்த லாரியின் மீது தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ராசிபுரம்,

ஈரோட்டில் இருந்து வைக்கோலை ஏற்றிக் கொண்டு ராசிபுரம் நோக்கி ஒரு லாரி வந்தது. லாரியை கோபி (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த லாரி ராசிபுரம் அருகே  உள்ள அத்தனூர் பகுதியில் வந்தபோது மேலே சென்ற மின் கப்பி லாரியின் மேல்புறத்தில் உரசி உள்ளது. இதனால் லாரியில் இருந்த வைக்கோல் தீ பற்றி உள்ளது.

இதனை அறிந்த டிரைவர் கோபி லாரியை சாலையோரம் நிறுத்தி உள்ளார். பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக் முயன்றார்.

ஆனால் வைக்கோல் மளமனவென எரிந்ததால் அணைக்க முடியவில்லை. பின்னர் இது தொடர்பாக ராசிபுரம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். 

தற்போது இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story