மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு வலைவீச்சு..!


மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு வலைவீச்சு..!
x
தினத்தந்தி 6 March 2022 2:16 PM IST (Updated: 6 March 2022 2:16 PM IST)
t-max-icont-min-icon

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்தவர் பெப்சின் (வயது 36). இவரது மனைவி ரேஷ்மா.  இந்த தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

கருத்து வேறுபாடு காரணமாக ரேஷ்மா கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.  சிறுமி தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை பார்க்க அவரது பாட்டி வந்து உள்ளார்.அப்போது சிறுமியிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டி அறிவுரை கூறியுள்ளார்.

இதனை கேட்ட சிறுமி தனக்கு தந்தை கொடுத்த பாலியல் தொல்லை குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி தன்னுடை மகள் ரேஷ்மாவியிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரேஷ்மா புகார் கொடுத்து உள்ளார். புகாரை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான தந்தையை தேடி வருகின்றனர்.

Next Story