மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம்


மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம்
x
தினத்தந்தி 6 March 2022 4:58 PM IST (Updated: 6 March 2022 4:58 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

சென்னை,

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், தரைக்காற்று பலமாக வீசுவதால் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. 

Next Story