காலணியில் ரூ.18.84 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து கடத்திய பெண் கைது


காலணியில் ரூ.18.84 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து கடத்திய பெண் கைது
x
தினத்தந்தி 6 March 2022 8:07 PM IST (Updated: 6 March 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் காலணியில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான பரிசோதனையின் போது தங்கம், போதைப் பொருள் உள்ளிட்ட பொருட்களை சிலர் மறைத்து வைத்து கடத்தி வருவது கண்டறியப்படுகிறது. 

அந்த வகையில் இன்று கொழும்புவில் இருந்து விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் காலணியை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 393 கிராம் தங்கம் மெல்லிய கட்டிகளாக மறைத்து ஒட்டி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

இந்த தங்கத்தின் மதிப்பு 18 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story