தனியார் தொழிற்சாலை பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி..!
அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பஸ் மோதியதில் போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்,
அரக்கோணம் ஜோதி நகரை சார்ந்த செந்தில்குமார் (47). இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு பன்னிரெண்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் திருத்தணி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஜோதி நகர் திருத்தணி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது எதிரில் வந்த தனியார் தொழிற்சாலை பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் தொழிற்சாலை பஸ்சை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story