திருப்பூர் நகைக்கடையில் திருடிய கொள்ளை கும்பல் கைது..!


திருப்பூர் நகைக்கடையில் திருடிய கொள்ளை கும்பல் கைது..!
x
தினத்தந்தி 6 March 2022 10:07 PM IST (Updated: 6 March 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்ட்ரல் ரெயில்வே போலீசார் கொடுத்த துப்பு மூலம் திருப்பூர் நகை கடையில் கொள்ளயடித்த வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, 

திருப்பூரில் உள்ள நகைக்கடையில் நேற்று வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தனர். இந்நிலையில் இவர்கள் பாக்மதி எக்ஸ்பிரஸ் வழியே தப்பி செல்வதாக திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே டிக்கெட் முன்பதிவு நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டபோது அதில் கொள்ளையில் ஈடுபட்ட அந்த 4 பேர் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து சென்றதற்கான வீடியோ பதிவுகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. உடனே அந்த வீடியோ காட்சிகள் பல்லார்ஷாவில் உள்ள ரெயில்வே காவல் நிலையத்திற்கு பகிரப்பட்டது.

பல்லார்ஷா ரெயில் நிலையத்தில் தீவிர சோதனயிட்ட போலீசார் அந்த நான்கு பேரையும் உடனடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3.3 கிலோ தங்க நகைகள், 14 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான ரொக்க பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

 சென்ட்ரல் ரெயில் நிலைய பாதுகாப்பு படை போலீசாரால் கிடைத்த துப்பு மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள், சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பாராட்டை தெரிவித்தனர்.

Next Story