திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை..!
திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்த மா.மு கோவிலூர் மொண்டியபட்டி பிரிவு அருகே காட்டுப்பகுதியில் வெட்டு காயங்களுடன் வாலிபர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் பெரியகோட்டையைச் சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் கோபால் (30) எனவும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை முன் விரோதமா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story