வாட்ஸ்-அப் பழக்கத்தால் விபரீதம்: 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சேலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி அந்த பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் ஒரு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.
கல்விக்காக பயன்படுத்த வேண்டிய அந்த செல்போனை மாணவி தவறுதலாக பயன்படுத்த தொடங்கியுள்ளார். அதாவது வாட்ஸ்-அப் மூலம் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கலையரசன் (வயது 24) என்ற வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ. படித்துள்ள கலையரசன் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து கலையரசன் மாணவியிடம் வாட்ஸ்-அப் மூலம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.
பாலியல் பலாத்காரம்
பின்னர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, தான் உன்னை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
உடனே கலையரசன் மார்த்தாண்டம் வந்து அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த மாணவியை தொடர்பு கொண்டு, இரவு நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு சென்று காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது.
வாலிபர் கைது
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மாணவியின் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த போது அந்த பகுதி மக்கள் கலையரசனை பார்த்துள்ளனர். பின்னர் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது சேலத்தில் இருந்து வந்து மாணவியை பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கலையரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Tags :
Next Story