அனைத்து துறைகளிலும் தமிழகம் “நம்பர் ஒன்” என்ற நிலையை விரைவில் அடையும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள மாணிக்கம் மகால் திருமண மண்டபத்தில் சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த சர்வதேச பர்னிச்சர் பூங்கா நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்கா தென்கோடி மாவட்டமான தூத்துக்குடியில் அமையவுள்ளது என்பது பெருமையாக உள்ளது. இந்தியாவின் 3-வது பெரிய துறைமுகமாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது. அதனால்தான் அறைகலன் பூங்காவை இங்கு அமைக்க திட்டமிட்டோம்
நகரங்கள் மாநகரங்களாக மாற வேண்டும். வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும். தமிழ்நாட்டின் வளத்தை பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே நமது அரசின் நோக்கம். திராவிட மாடல் இலக்கை நோக்கி நாம் செயல்பட்டு வருகிறோம்
விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வணிகர்கள், உழவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நிதிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது. பெல்ஜியம் நிறுவனம் ரூ.450 கோடி முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story