திம்பம் மலைப்பாதை; 5-வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து விபத்து...!
திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த பாதையில் வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளானால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வேன் ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த ஹரிகுமார் (வயது 53) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
வேன் 5-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் வேன் சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் டிரைவர் ஹரிகுமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் சம்பவ இடத்துக்குவந்த சத்தியமங்கலம் போலீசார், காயம் அடைந்த டிரைவர் ஹரிகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story