உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் படிப்பைத்தொடர நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்


Twitter; mkstalin
x
Twitter; mkstalin
தினத்தந்தி 7 March 2022 2:46 PM IST (Updated: 7 March 2022 2:46 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் - ரஷியா இடையே போர் தொடங்கிய பிறகு 1,200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர்.

சென்னை,

ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை இந்தியாவிலே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர்  மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "உக்ரைன் - ரஷியா இடையே போர் தொடங்கிய பிறகு 1,200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர்.நாடு திரும்பிய மாணவர்களின் படிப்பு சீர்குலைந்துள்ளது. அவர்களின் எதிர்காலமும் அச்சுறுத்தலில் உள்ளது. 

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் இந்தியாவிலே படிப்பை தொடர உடனடி நடவடிக்கை தேவை. தற்போதைய சூழலில் நாடு திரும்பிய மாணவர்கள் உக்ரைன் சென்று படிப்பை தொடர்வது சாத்தியமில்லை. நாடு திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர உடனடி தீர்வு தேவை" என தெரிவித்துள்ளார்.

Next Story