ராமநாதபுரம்: கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்யாத அதிகாரியை கண்டித்து ஆர்பாட்டம்..!


ராமநாதபுரம்: கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்யாத அதிகாரியை கண்டித்து ஆர்பாட்டம்..!
x
தினத்தந்தி 7 March 2022 3:08 PM IST (Updated: 8 March 2022 12:55 PM IST)
t-max-icont-min-icon

சாயல்குடியில் கூட்டுறவு வங்கியில் நகை கடனை தள்ளுபடி செய்யாத அதிகாரிகளை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

சாயல்குடி,

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 பவுன் வரையினலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக அறிவித்திருந்தது.

பின்னர், திமுக கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதே போன்று தகுதியானவர்கனின் நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டு வருகின்றது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது சிக்கல் கிராமம். இந்த பகுதியில்  கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது.
இந்த வங்கியில் உள்ள 5 பவுன் வரையிலான நகைகளை அதிகாரிகள் தள்ளுபடி செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இத்தகைய அதிகாரிகளை கண்டித்து  ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது கூட்டுறவு வங்கியை அவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 


Next Story