ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த சமாதான புறாவாக மாறிய பள்ளி மாணவிகள்..!
திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி பள்ளி மாணவிகள் புறா போன்ற வடிவத்தில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி,
உக்ரைன்-ரஷியா நாடுகளுக்கு இடையே தீவிரமாக போர் 12-வது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்தப் போரை நிறுத்துவதற்காக பல்வேறு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் ரஷியா உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி சமாதான சின்னமாகத் திகழும் புறா போன்ற வடிவத்தில் அமர்ந்திருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வின் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து சமாதான பறவையான புறாக்களைப் கையில் வைத்து சமாதானம் உலகத்தில் நிலவட்டும் என்ற வாசகத்தைக் கூறியபடி வானில் பறக்கவிட்டனர்.
பின்னர் இதுகுறித்து நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பேசியதாவது;-
தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிராக அநீதிகள் நடந்து வருகின்றது. சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்து வருகிறது. அதனைத் தடுக்க வலியுறுத்தியும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டே இருக்கிறது அதை நிறுத்தி சமாதானத்தை வலியுறுத்தவேண்டும் என்பதற்காகவும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தி உள்ளோம் எனத் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story