பெண் குளித்ததை பார்த்ததால் கொலை மிரட்டல்... அவமானத்தால் வாலிபர் தற்கொலை...!
பெண் குளித்ததை பார்த்த வாலிபர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் மாது (வயது 23) தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மாது நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் குளிப்பதை பார்த்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் மாதுவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு இருந்த மாதுவை அவர்கள் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மாது மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இந்த அவமானம் தாங்காத அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இதனை அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story