புதுவையில் மருந்து உற்பத்தி பூங்கா தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும்
மத்திய அரசின் ஒத்துழைப்போடு, புதுவையில் மருந்து உற்பத்தி பூங்கா தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மத்திய அரசின் ஒத்துழைப்போடு, புதுவையில் மருந்து உற்பத்தி பூங்கா தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
புதுச்சேரி அரசு மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மருந்து தயாரிப்புகள் சங்கம் சார்பில் புதுவையில் ஒருங்கிணைந்த மருந்து உற்பத்தி பூங்கா (பார்மா பார்க்) அமைப்பதற்கான முதலீட்டாளர்கள் மாநாடு அக்கார்டு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு மருந்து தயாரிப்புகள் சங்க செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
சிறிய மாநிலமான புதுச்சேரியில் அனைத்து தொழிற்சாலைகளும் வர வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தபோது, அதற்காக சேதராப்பட்டில் 750 ஏக்கர் நிலம் உடனடியாக கையகப்படுத்தப்பட்டது.
தொழிற்சாலைகள் தொடங்குவதற்காக காரைக்காலில் 500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடங்களில் நல்ல தொழிற்சாலைகள் வர வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
புதுவையில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரசு வேலை என்பது முடியாத காரியம். தொழிற்சாலைகள் வரும் போது அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மருந்து உற்பத்தி பூங்கா கொண்டு வரும் போது, 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரியில் மருந்து உற்பத்தி தொழிற்சாலை தொடங்க முதலீட்டாளர்கள் வந்திருப்பது பெருமை அளிக்கிறது. நீங்கள் தைரியமாக வந்து முதலீடு செய்யலாம். உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. தேவையான நிலம் ஒதுக்கி கொடுத்து மத்திய அரசின் ஒத்துழைப்போடு மருந்து உற்பத்தி பூங்கா தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
மருந்து உற்பத்தி பூங்கா
நம்முடைய நாட்டில் மருந்து உற்பத்தி பூங்கா அதிகளவில் இருக்க வேண்டும். அதற்காக ஒருங்கிணைந்த மருந்து உற்பத்தி பூங்கா தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், சார்பு செயலர் புனிதாமேரி, மருந்து கட்டுப்பாட்டு துறையின் கட்டுப்பாடு, உரிமம் வழங்கும் ஆணைய அதிகாரி ஆனந்த கிருஷ்ணன், தென்மண்டல துணை மருந்து கட்டுப்பாட்டாளர் மணிவண்ணன், மருந்து தயாரிப்புகள் சங்க தலைவர் பிரமோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story