‘ஸ்பிக்' நிறுவன தொழிற்சாலை வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்
தூத்துக்குடி 'ஸ்பிக்' நிறுவன தொழிற்சாலை வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை,
தூத்துக்குடியில் ‘ஸ்பிக்' நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் ரூ.150 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மிதக்கும் சோலார் திட்டங்கள் பாரம்பரிய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளை விட அதிக உற்பத்தியை வழங்குவதோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி, விலைமதிப்பற்ற தண்ணீரை ஆவியாகாமல் சேமிக்கிறது. இந்த சூரிய மின்சக்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் 'ஸ்பிக்' மற்றும் 'கிரீன்ஸ்டார்' உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.
சுற்றுச்சூழல் நன்மை
இந்த மிதக்கும் சூரியமின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது. சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதை தவிர, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவியாகாமல் 60 சதவீதம் கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நன்மைக்கும் இந்த திட்டம் உதவுகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.11.2021 அன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 12.59 கி.மீ. நீளத்திற்கான 19 சாலைப் பணிகள், மூலதனமானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 40 சாலைப் பணிகள் மற்றும் 25 சிப்பங்கள் மூலம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், குமாரகோவில் - பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story