உக்ரைனில் இருந்து இதுவரை 1,340 மாணவர்கள் தமிழகம் வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு வரும் பணியில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
சென்னை,
உக்ரைனில் சிக்கியிருந்த தமிழக மருத்துவ மாணவ, மாணவிகள் 123 பேர் நேற்று இரவு 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்கு தமிழக அரசின் செலவில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு வரும் பணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார். இதுவரை 1,340 தமிழக மாணவர்கள் அரசு சார்ந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து சேர்திருப்பதாகவும் தெரிவித்த அவர், மாணவர்களை அவர்களின் பெற்றோரிடம் சேர்ப்பது வரை துறை சார்ந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story