மேட்டூர் அணை நீர்மட்டம் 106.02 அடியாக குறைவு


மேட்டூர் அணை நீர்மட்டம் 106.02 அடியாக குறைவு
x
தினத்தந்தி 8 March 2022 9:33 AM IST (Updated: 8 March 2022 9:33 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு 72.86 டி.எம்.சி ஆக உள்ளது.

சேலம்,

மேட்டூர் அணைக்கு நேற்று 450 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 461 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு 72.86 டி.எம்.சி ஆக உள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 106.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 106.02 அடியாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. 

Next Story