பல்லடம்: பைக்குகள் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து - 4 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி..!


பல்லடம்: பைக்குகள் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து - 4 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி..!
x
தினத்தந்தி 8 March 2022 12:27 PM IST (Updated: 8 March 2022 12:27 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே 2 பைக்குகள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 4 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்,

கோவையைச் சேர்ந்த குமரேசன் மற்றும் அவரது மனைவி ஆனந்தி பைக்கில் கோவையிலிருந்து மணப்பாறை நோக்கிச் சென்றுள்ளனர். மேலும் மற்றொரு பைக்கில் முருகன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி 4 வயதுக் குழந்தையுடன் அதே வழியில் சென்றுள்ளனர்.

அப்போது திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாராபுரம் சாலையில் புத்தெரிச்சல் பகுதியில் வரும் போது , எதிரே காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோ நேருக்கு நேராக 2 பைக்குகள் மீது மோதியது. இதில் இரண்டு இரு பைக்குகளில் சென்ற ஐந்து பேரும் சரக்கு ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் குமரேசன், முருகன், முத்துலட்சுமி மற்றும் 3 வயதுக் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆனந்தியை மீட்டு போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story