தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18- ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் மு.அப்பாவு


தலைமைச்செயலகம்
x
தலைமைச்செயலகம்
தினத்தந்தி 8 March 2022 6:40 PM IST (Updated: 8 March 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் மார்ச் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 2022-23  ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்


அப்பாவு

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  மேலும் ,கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

Next Story