புதுவை அழகு நிலையத்தில் விபசாரம் 4 பெண்கள் மீட்பு 2 பேர் கைது
அழகு நிலையத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். வாடிக்கையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
அழகு நிலையத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். வாடிக்கையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அழகுநிலையத்தில் விபசாரம்
புதுவையில் அழகு நிலையம், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் விபசாரம் கொடிகட்டி பறக்கிறது. போலீசாரின் பார்வை சமீப காலமாக இவற்றின் மீது பதிந்துள்ளது.
அழகு நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தும் போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்களை மீட்டு வருகின்றனர். விபசாரத்தில் ஈடுபடுவர்களை கைது செய்து அழகுநிலையங்களை மூடவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
4 பெண்கள் மீட்பு
இந்தநிலையில் காந்தி வீதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் விபசாரம் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்கள். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.
இதையடுத்து அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டனர். அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களான பிரவீன்குமார் மற்றும் பிரேம்நாத் ஆகியோரை கைது செய்தனர். இந்த அழகு நிலையத்தை நடத்தி வந்த தேங்காய்த்திட்டை சேர்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி கலா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story