கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: கீரமங்கலம் பகுதியில் மீண்டும் மொய் விருந்து தொடங்கியது


கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: கீரமங்கலம் பகுதியில் மீண்டும் மொய் விருந்து தொடங்கியது
x
தினத்தந்தி 9 March 2022 12:09 AM IST (Updated: 9 March 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொய் விருந்து நடத்த தொடங்கியுள்ளனர்.

கீரமங்கலம்:
மொய் விருந்து
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மாங்காடு, வடகாடு, அனவயல், நெடுவாசல் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, பைங்கால், ஆவணம் உள்பட சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் மொய் விருந்து நிகழ்ச்சிகள் கடந்த 2 ஆண்டு்களாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மொய் விருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பல கிராமங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு கடைசி நாளில் கூட மொய் விருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல லட்ச ரூபாய் இழப்புகளும் ஏற்பட்டது.
மீண்டும் தொடங்கியது
கொரோனா பாதிப்புகளால் சுமார் 2 ஆண்டுகளாக வழக்கமான மொய் விருந்து காலமான ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மட்டுமின்றி தளர்வுகள் கிடைக்கும் நாட்களில் மொய்விருந்துகளை நடத்தி வருகின்றனர். அதனால் மொய் வசூலும் குறைவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்துகளை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி மாதங்களில் மொய் விருந்துகள் நடத்தும் போது சரியான அளவில் மொய் வசூல் கிடைத்தது. ஆனால் தற்போது பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் போதிய வருவாய் இல்லாததால் மொய் வசூலும் பாதியாக குறைந்து வருகிறது. வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாத நிலையால் தான் தற்போது பருவம் தப்பிய மொய் விருந்துகளை நடத்த வேண்டியுள்ளது என்றனர்.

Next Story