திராவிட மாடல் ஆட்சி மணி மகுடத்தின் மகத்தான கொள்கை மகளிர் தின வாழ்த்து செய்தியில் கி.வீரமணி பாராட்டு


திராவிட மாடல் ஆட்சி மணி மகுடத்தின் மகத்தான கொள்கை மகளிர் தின வாழ்த்து செய்தியில் கி.வீரமணி பாராட்டு
x
தினத்தந்தி 9 March 2022 12:18 AM IST (Updated: 9 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண் வேட்பாளர்கள்: திராவிட மாடல் ஆட்சி மணி மகுடத்தின் மகத்தான கொள்கை மகளிர் தின வாழ்த்து செய்தியில் கி.வீரமணி பாராட்டு.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மகளிர் தினத்தையொட்டி, உலக மகளிருக்கு அன்பான உரிமை மிளிரும் வாழ்த்துகள். மக்கள் தொகையில் சரி பாதியான மகளிர் இன்னமும் மனித உரிமைகளை, சம உரிமைகளை, சமத்துவத்தை, சம வாய்ப்பினை, சம ஈவினைப் பெற போராட வேண்டிய நிலைதான் உலகமெங்கும் உள்ளது.

பெண்ணுரிமைக்கான போராட்டம் நம் நாட்டின் அவசியம். நமது நாட்டிலோ இந்தப் போராட்டத்தின் தேவை பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது. காரணம் பெரும்பான்மையான மக்களின் மதமும், சனாதன தர்மமும் பெரிதும் மனுதர்ம முறையாக அமைந்துள்ள கொடுமை நீடிப்பதுதான்.

97 ஆண்டுகளுக்கு முன்னே தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் இந்த பிறவி பேதத்திற்கு எதிராகப் போர் முழக்கம் செய்து, போர்க்கொடி தூக்கி, களம் கண்டு போராட்டங்களில் பெருவெற்றியை பல துறைகளில் பெற்றுள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது.

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மு.க.ஸ்டாலினின் 9 மாத ஆட்சி சாதனைகளில் சிறந்த சாதனையாக 50 சதவீதத்திற்கு மேல் நகர்ப்புற உள்ளாட்சி வேட்பாளர்களாக பெண்களை நிறுத்தி பெருவெற்றிக்கனி பறித்து, பெண்ணின ஆளுமையை அகிலத்திற்கு அறிவிக்க ஆயத்தமாகியிருப்பது, திராவிட மாடல் ஆட்சி மணி மகுடத்தின் மகத்தான கொள்கை முத்துக்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story