தமிழக பட்ஜெட் 18-ந் தேதி தாக்கல் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபையில் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை,
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் 18-ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. அன்று காலை 10 மணிக்கு 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டைப் போலவே அது காகிதமில்லாத பட்ஜெட்டாக கணினி தொடுதிரை முறையில் தாக்கல் செய்யப்படும்.
முன்பண மானியக் கோரிக்கை
அதன் பிறகு சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த நிதிநிலை அறிக்கை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்த வேண்டும்? சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். அதன் பிறகு 2022-23-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2021-22-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் சட்டசபையில் நிதித்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.
நீட் சட்டமசோதா என்ன ஆயிற்று?
சட்டசபையில் வேளாண்மை பட்ஜெட் என்றைக்கு தாக்கல் செய்யப்படும் என்பது அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்குப் பின்பு அறிவிக்கப்படும். அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் எப்போது நடைபெறும் என்பதும் அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும்.
அந்தக் கூட்டத்தில், மானியக் கோரிக்கைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால், அதுவும் தொடர்ந்து நடத்தப்படும்.
நீட் தேர்வு தொடர்பாக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, அதில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுவிட்டதா? என்பதை நான் விசாரித்து பார்க்கவில்லை. தேவைப்பட்டால் அதுபற்றி விசாரித்து தெரியப்படுத்துவேன்.
நேரலை ஒளிபரப்பு
பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சி முழுவதும், சட்டசபையில் இருந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். கடந்த கூட்டத் தொடரில் கேள்வி - பதில் நிகழ்வும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதுபோல் இந்த கூட்டத் தொடரிலும் நிகழ்த்தப்படும்.
எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் விவாதங்களும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுமா? என்று கேட்டால், சட்டசபையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவாகும். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சில பிரச்சினைகள் உள்ளன.
அவற்றை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து சரியான நிலையை எட்டிய பிறகு அதுவும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.
நேரலை ஒளிபரப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. நீட் தேர்வு தொடர்பான சிறப்பு கூட்டமும் நேரலை மூலம் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டது. இனி நடக்கும் கூட்டத் தொடர் அதைவிட சிறப்பாகத்தானே இருக்க முடியும்.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், சட்டமன்றத்திற்குள் வருவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும், ஏற்கனவே உள்ள கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை தேவையான அளவுக்கு செய்யப்படும். சிறிய அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் வந்துவிட்டது. எனவே தற்போது தினசரி தொற்றின் அளவு மிகவும் குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story