தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென் மாவட்டங்களில் இன்று மழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (மார்ச். 9) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச். 10, மார்ச் 11) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மார்ச் 12: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
மார்ச் 13: தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 7 செ.மீ., திருச்செந்தூரில் 2 செ.மீ., சாத்தான்குளத்தில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story