உக்ரைனில் மருத்துவபடிப்பு தொடர முடியாத மாணவர்கள் தமிழகத்தில் படிப்புகளை தொடர நடவடிக்கை வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


உக்ரைனில் மருத்துவபடிப்பு தொடர முடியாத மாணவர்கள் தமிழகத்தில் படிப்புகளை தொடர நடவடிக்கை வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 9 March 2022 3:47 PM IST (Updated: 9 March 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் மருத்துவபடிப்பு தொடர முடியாத மாணவர்கள் தமிழகத்தில் படிப்புகளை தொடர மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மருத்துவ படிப்பிற்காக சென்ற மாணவ மாணவியர் தங்களுடைய மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தமிழகத்திற்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது போர் முடிவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

எனவே உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலையில் நமது தமிழக மாணவர்களும், அவர்களது  பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களது இச்சூழ்நிலையை கருத்திற் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வியாளர்களை கலந்து பேசி, நமது மாணவச்செல்வங்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பினை தொடர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Next Story