பாரம்பரிய மீன்பிடி திருவிழா; ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்...!
மேலூரில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டி கம்புளியான் கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய வழக்கப்படி கிராமத்தின் சார்பில் துண்டு வீசப்பட்டது. அதன்பிறகு கண்மாய் கரையில் கூடியிருந்த பொதுமக்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி மீன்களை பிடிக்க துவங்கினர்.
கூடைகள், வலைகள், கச்சா ஆகியவைகளை பயன்படுத்தி கெலுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி, உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
பிடித்த மீன்களை வீடுகளில் சமைத்து சாப்பிவது மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். மீன்களை விற்பனை செய்வது தெய்வகுற்றம் என்பது இப்பகுதி மக்கள் நம்பிக்கை என்று பல ஆண்டுகளாக மீன்பிடித்து வரும் பூமினாதன் என்பவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story