அரசே சம்பளம் வழங்க வலியுறுத்தி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம்
அரசே சம்பளம் வழங்க வலியுறுத்தி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
அரசே சம்பளம் வழங்க வலியுறுத்தி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அவர்கள் சட்டசபை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுப்பு எடுத்து...
போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகவேல், ஆனந்தகணபதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
போராட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து வந்திருந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
====
Related Tags :
Next Story