ஒப்பந்த டாக்டர்களுக்கு ரூ 10 ஆயிரம் சம்பளம் உயர்வு ரங்கசாமி அறிவிப்பு


ஒப்பந்த டாக்டர்களுக்கு ரூ 10 ஆயிரம் சம்பளம் உயர்வு ரங்கசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2022 10:00 PM IST (Updated: 9 March 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு சுகாதாரத்துறையில் ஒப்பந்த டாக்டர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி
புதுவை அரசு சுகாதாரத்துறையில் ஒப்பந்த டாக்டர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ஒப்பந்த ஊழியர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் அவர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இவர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு தற்போது சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.10 ஆயிரம் சம்பள உயர்வு

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர், செவிலியர், லேப் டெக்னீசியன், தொழில்நுட்ப உதவியாளர், சமூக பணியாளர், கிராமப்புற செவிலியர், கண் பரிசோதகர் ஆகியோருக்கு 682 பேருக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும். இதில் மருத்துவர்களுக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்று என்று நிருபர்கள் கேட்ட போது, நல்ல நாள் பார்த்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வாரிய தலைவர்கள் நியமனம் எப்போது என்று கேள்வி எழுப்பியபோது, நியமிக்கும் போது தெரியும் என்று பதிலளித்தார்.
இதற்கிடையே முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து சம்பள உயர்வு தொடர்பான உத்தரவு சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story