சிறுமிக்கு பாலியல் தொல்லை 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை  6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 March 2022 11:01 PM IST (Updated: 9 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

காரைக்காலை அடுத்த நெடுங்காடு அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின்பேரில் நெடுங்காடு போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணை முடிவில் ராஜ்குமார் குற்றவாளி என நிரூபணமானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். 
கடந்த 6 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தார்.

வாலிபர் கைது

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து தேடி வந்தனர். இதற்கிடையே ராஜ்குமார் கோவையில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன்பால் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் கோவை விரைந்தனர். 
தமிழக-கேரள எல்லையான ஆவரணம்பூ தோட்டத்தில் பதுங்கியிருந்த ராஜ்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காரைக்கால் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story