கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் 15-ந்தேதி தேர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வருகிற 15-ந்தேதி தேர் திருவிழாவும், 16-ந்தேதி 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான பங்குனி விழா கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு மற்றும் விநாயகர் உற்சவத்தை தொடர்ந்து கொடியேற்றம் நேற்று காலை 6 மணி அளவில் நடந்தது.
தொடர்ந்து நேற்று இரவு அம்மை மயில் வடிவம் சிவபூஜை காட்சியில் அருள்பாலித்தார். கோலாகலமாக நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) வெள்ளி சூரிய வட்டம் மற்றும் இரவு வெள்ளி சந்திர வட்டம் வாகனத்தில் சாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, கிளி, அன்னவாகனங்களில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 11-ந்தேதி (வெள்ளிகிழமை) பகல் விழாவாக அதிகார நந்தி காட்சி நிகழ்ச்சியும், இரவு பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
பங்குனி தேர் திருவிழா
வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி, வாகனங்கள், இரவு நாகம், காமதேனு, ஆடு வாகனங்கள், 13-ந்தேதி சவுடல் விமானம், இரவு வெள்ளி ரிஷப வாகன காட்சியும், 14-ந்தேதி (திங்கள்கிழமை) பல்லாக்கு விழா, இரவு ஐந்திருமேனி யானை வாகனங்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 15-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை திருத்தேர் வடம் பிடித்தல், இரவு தேரிலிருந்து இறைவன் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 16-ந்தேதி (புதன் கிழமை) பகல் விழாவாக வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது. அன்று இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழா நடக்கிறது.
ஐந்திருமேனிகள் விழா
தொடர்ந்து வருகிற 17-ந்தேதி ஐந்திருமேனிகள் விழா, இரவு இறைவன் இரவலர் கோல விழாவும், வருகிற 18-ந்தேதி திருக்கூத்த பெருமான் திருக்காட்சி ஐந்திருமேனிகள் விழா, இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.
தொடர்ந்து, வருகிற 19-ந்தேதி உமா மகேசுவரர் தரிசனம், இரவு பந்தம் பறி விழாவும், வருகிற 20-ந்தேதி நிறைவுத் திருமுழுக்கு, இரவு விடையாற்றி நிகழ்ச்சியுடன் பங்குனி திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story