தமிழக பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது - அண்ணாமலை பேட்டி


தமிழக பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 10 March 2022 1:26 AM IST (Updated: 10 March 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது - அண்ணாமலை பேட்டி.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசு மக்களுக்கான எந்த புதிய விஷயத்தையும் செய்யவில்லை. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், ஆவினில் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கின்றனர். அதுபோல், டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலையை உயர்த்தி விட்டனர். அதில் வரும் ரூ.2 ஆயிரம் கோடியை வைத்து தான் அரசாங்கத்தை நடத்த இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மோசமான முன்னுதாரணமாக தி.மு.க. அரசு இதை செய்கிறது.

அடுத்து வருகின்ற தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது. விலை உயர்வு, வரி உயர்வு மட்டுமே பட்ஜெட்டில் இருக்கும். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பொருளின் விலையையும் தி.மு.க. அரசு உயர்த்தும் என்பதற்கு முன்னோட்டமாகத்தான் இதனை பார்க்க வேண்டும்.

புதிதாக எந்த சிந்தனையும் இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பார்கள். 5 மாநில தேர்தலை வைத்து பூச்சாண்டி காட்டியவர்களுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுக்கும். அதாவது, 5 மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story