முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று 2 பேரூராட்சி துணைத்தலைவர்கள் ராஜினாமா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று 2 பேரூராட்சி துணைத்தலைவர்கள் ராஜினாமா செய்தனர். பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தேனி,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர் சுமிதா தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர் ராஜாமுகமது (வயது 49) என்பவர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க.வை சேர்ந்தவரே துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திடீர் நெஞ்சுவலி
இதற்கிடையே நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பெரியகுளம் நகராட்சியில் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராஜாமுகமதுவுக்கு, நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ராஜாமுகமதுவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரூராட்சி துணைத் தலைவர்கள் ராஜினாமா
இதற்கிடையே திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ் மற்றும் கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வின் மரகதமணி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

Related Tags :
Next Story