துணை மின் நிலையத்தில் தீ விபத்து; 5 மணி நேரம் தடைபட்ட மின்சார வினியோகம்...!
துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 5 மணி நேரத்திற்கு மின்சார வினியோகம் தடைபட்டது.
மணல்மேடு,
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு துணை மின் நிலையத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி ஒன்றும், 16 மெகாவாட் திறன்கொண்ட மின் மாற்றி இரண்டு என மூன்று மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ராதாநல்லூர், ஆத்தூர், முடிகண்டநல்லூர், திருவாளப்புத்தூர், சித்தமல்லி உள்ளிட்ட பகுதிகளின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றியில் தீ பற்றியது. தீ சிறிது நேரத்தில் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.
இது தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மணல்மேடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் ஆவர்களால் முடியாததால் மயிலாடுதுறையிலிருந்து நுரை கலவை வாகனம்
வரவழைத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்
இந்த தீ விபத்தால் மணல்மேடு சுற்று வட்டார பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
Related Tags :
Next Story