4 மாநிலங்களில் பாஜக வெற்றி: பிரதமர் மோடியின் ஆளுமை மற்றும் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - ஓ.பன்னீர்செல்வம்


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 10 March 2022 5:13 PM IST (Updated: 10 March 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'அன்புள்ள பிரதமருக்கு, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற பொது தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் இதயங்களையும் வென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள். 

இது ஆற்றல் மிக்க உங்கள் தலைமையின் கீழ் பாஜகவின் நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு கிடைத்த தீர்ப்பு . இது வளர்ச்சிக்கான ஆணையாகும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

Next Story