நடிகர் சூர்யா படத்திற்கு பா.ம.கவினர் எதிர்ப்பு: திரையிடாமல் படம் நிறுத்தி வைப்பு...!


நடிகர் சூர்யா படத்திற்கு பா.ம.கவினர் எதிர்ப்பு: திரையிடாமல் படம் நிறுத்தி வைப்பு...!
x
தினத்தந்தி 10 March 2022 5:45 PM IST (Updated: 10 March 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பா.ம.கவினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து படம் திரையிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைவீதியில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று வெளியிடப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

இதனை அறிந்த செஞ்சி நகர பாமக செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் திரையரங்கை முற்றுகையிட்டு திரைப்படத்தை திரையிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


இதனை அறிந்து செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது திரைப்படத்தை திரையிடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்  20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் படம் வெளியிட எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து திரையரங்க நிர்வாகம் படத்தை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது.

இந்த சம்பவத்தால் திரையிடப்பட இருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை காண வந்த சூர்யா ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story