இலங்கயைில் விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் உள்பட 9 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்
இலங்கயைில் விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் உள்பட 9 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்
இலங்கயைில் விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் உள்பட 9 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்.
சிறை பிடிப்பு
காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டைச்சேர்ந்த மணிகண்டன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த வளர்செல்வன் (வயது 26), எழிலன் (24), பிரகலாதன் (18) மற்றும் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 9 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தெற்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே 9 மீனவர்களையும் உடனே மீட்கவேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியின் காரணமாக, 9 மீனவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர்.
சொந்த ஊருக்கு திரும்பினர்
இதையடுத்து 9 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்து இறங்கினர். அவர்களில் வளர்செல்வன், எழிலன், பிரகலாதன் ஆகிய 3 மீனவர்கள் இன்று காரைக்கால் வந்தனர். மற்ற 6 மீனவர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
காரைக்கால் வந்த மீனவர்கள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியின் காரணமாக விரைவாக எங்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் எங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் படகை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story